சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அபாரம்
சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அபாரம்
UPDATED : மே 22, 2026 05:09 PM
ADDED : மே 22, 2026 05:11 PM
சென்னிமலை:
சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2025 - 26ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவர்கள் ஹரிணி, கிருபாஷினிகா, கிருபா, தமிழ் அரசு ஆகியோர், 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். நவீன் கார்த்திகேயன், தர்ஷனாஸ்ரீ, ஜனனி ஆகியோர், 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்தனர்.
மாணவி ஜெயஸ்ரீ, 486 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பெற்றார். மேலும், 480க்கு மேல், 10 பேரும், 470க்கு மேல் 21 பேரும், 460க்கு மேல் 26 பேரும், 450க்கு மேல் 35 பேரும், 400 க்கு மேல் 75 பேரும் மதிப்பெண் பெற்றனர். பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய அனைவரும், தேர்ச்சி பெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, பள்ளி தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர். மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் மெர்ஸி பமிலா, இருபால் ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
