sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் உத்தரவு

உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் உத்தரவு

உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் உத்தரவு


UPDATED : மே 22, 2026 07:59 PM

ADDED : மே 22, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 07:59 PM ADDED : மே 22, 2026 08:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

லக்னோ:
உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைகள், கல்லூரிகளிலும் மாணவர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கி, அம்மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குஜராத்தைச் சேர்ந்த ஆனந்திபென், கவர்னராக உள்ளார்.

தன்னம்பிக்கை

மாநில பல்கலைகளின் வேந்தரான ஆனந்திபென் படேல் தலைமையில் நேற்று முன்தினம் லோக் பவனில் பல்கலை துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து லோக் பவன் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்கள் இடையே சமத்துவத்தை உண்டாக்கும் நோக்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை, கல்லூரிகளில் சீருடை அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

இந்த உத்தரவு, பல்லியாவில் உள்ள ஜனநாயக சந்திரசேகர் பல்கலையுடன் இணைக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாகவும் மாற்றும் வகையில் தொழிற்கல்வி மற்றும் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, மாணவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மாணவியர் தங்கும் விடுதிகளின் நிலையை மேம்படுத்துவதையும், அவை சமூக விரோதச் சூழல்களில் இருந்து விலகி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

சுதந்திரம்


தேசிய கல்வி கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதுடன், பாடங்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, மாணவர்கள் தங்களின் முக்கிய பாடங்களுடன் யோகா, ஓவியம் மற்றும் பிற திறன்கள் குறித்த அறிவையும் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us