sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : மே 30, 2026 10:04 AM

ADDED : மே 30, 2026 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 10:04 AM ADDED : மே 30, 2026 10:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகளுக்கு 2025 - 26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குநர் கிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;


மறுவேலை வாய்ப்பு பெற்றிடாத மற்றும் வருமானம் வரி செலுத்துவோர் பட்டியலில் இடம்பெறாதவருமான, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையரின் வாரிசுகளுக்கு, பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி முப்படை நலத்துறை அலுவலகத்தில் வரும் 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் நேரில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். அல்லது, https://sainnik.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரிஜினல் பள்ளி கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத்துறையில் ஜூலை 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும்.

மேலும், காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்தவர்கள் அந்தந்த மண்டல நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us