தொடர்ந்து குளறுபடி ஏன்: தேர்வு விவகாரத்தில் சசி தரூர் கேள்வி
தொடர்ந்து குளறுபடி ஏன்: தேர்வு விவகாரத்தில் சசி தரூர் கேள்வி
UPDATED : ஜூன் 03, 2026 08:30 PM
ADDED : ஜூன் 03, 2026 08:31 PM
புதுடில்லி:
தேர்வு விவகாரங்களில் தொடர்ந்து குளறுபடி ஏற்படுவது ஏன் என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்னையை ஏற்படுத்திய நிலையில் சி.பி.எஸ்.இ., தேர்விலும் குளறுபடி ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சசிதரூர் கூறியதாவது:
தேர்வுகளின் நேர்மையை நம்ப முடியாத வகையில், வினாத்தாள் கசிவு, ஊழல் , மற்றும் நேர்மமையின்மையால் சீர்குலைந்துள்ளது என்பதை கண்டறியும் போது, தேர்வுக்கு தயாரானவர்கள், மீண்டும் முதலில் இருந்து துவங்க நேரிடும். எஸ்.ஏ.டி., கேம்ப்ரிட்ஜ்தேர்வுகள், ஐ.எஸ்.சி., போன்று உலகம் முழுவதும் நடக்கும் நியாயமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளால் நிறைந்துள்ளன.
நமது அரசு நிர்வகிக்கும் ஒரு விஷயத்தில் மட்டும் ஏன் தொடர்ந்து குளறுபடி நடக்கின்றன? தேசிய அளவில் நடக்கும் தேர்வில் ஏன் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் அரசால் ஏன் உறுதி செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
