sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்ய வேண்டாம்; உதயநிதி கடிதம்

மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்ய வேண்டாம்; உதயநிதி கடிதம்

மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்ய வேண்டாம்; உதயநிதி கடிதம்


UPDATED : ஜூன் 05, 2026 12:15 PM

ADDED : ஜூன் 05, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2026 12:15 PM ADDED : ஜூன் 05, 2026 12:17 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்தியத் தொகுப்பு சரண்டர் செய்ய வேண்டாம் என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம் எழுதியுள்ளார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 152 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்சந்தீமன்றம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது.

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.

ஆகவே முதல்வராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us