அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
UPDATED : ஜூன் 08, 2026 01:11 PM
ADDED : ஜூன் 08, 2026 01:12 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு பாலர் சங்கம் மற்றும் சென்னை நலம் செய்ய விரும்பு அறக்கட்டளை இணைந்து, அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம், நத்தப்பேட்டை, அய்யம்பேட்டை மற்றும் செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில், 75,000 ரூபாய் மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.சங்கர், சி.சங்கர், ஜி.வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
