தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி

தேசிய தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி

தேசிய தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி


UPDATED : ஜூன் 15, 2026 10:43 AM

ADDED : ஜூன் 15, 2026 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 10:43 AM ADDED : ஜூன் 15, 2026 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
'நீட்' உட்பட தேசிய அளவிலான தேர்வுகளை மிக பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதை உறுதி செய்ய, 'ஐகாட் கர்மயோகி' இணையதளத்தில், தேர்வு அதிகாரிகளுக்காக பிரத்யேக, 'டிஜிட்டல்' பயிற்சி திட்டத்தை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, என்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:


'ஐகாட் கர்மயோகி' இணையதளத்தில், 'தேர்வு கர்மயோகி: தேர்வு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்' என்ற டிஜிட்டல் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்களின் திறனை மேம்படுத்துவதும், தேர்வுகளை சீராகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதுமே இதன் நோக்கம்.

இந்த பயிற்சியில், தேர்வு நடைமுறைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மையை பேணுவதில் தேர்வு அதிகாரிகளின் பங்கு குறித்து விளக்கப்படும். மேலும், தேர்வு மையத்தை தயார் செய்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற தேர்விற்கு முந்தைய தயாரிப்புகள் குறித்தும் கற்பிக்கப்படும்.

தேர்வு நடக்கும் நாளில், தேர்வுக்கு முன்னதாகவும், தேர்வின் தொடக்கத்திலும், தேர்வு நடக்கும் போதும், தேர்வு முடிந்த பிறகும் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் தேர்வு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். 'ஐகாட் கர்மயோகி' இணையதளத்தின் மூலம், நாடு முழுதும் தேர்வு அதிகாரிகள் சுயக்கற்றல் முறையில் பயிற்சி பெற்று, தேர்வெழுதி சான்றிதழ் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் நடந்த, மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' இளநிலை தேர்வில், வினாத்தாள் கசிந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு, வரும் 21ல் நடக்கவுள்ள நிலையில், தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சியை என்.டி.ஏ., அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us