தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகத்தில் புத்தகங்கள் படித்த நாட்கள் நினைவுகளை பகிர்ந்த கண்ணன் அய்யர்

நுாலகத்தில் புத்தகங்கள் படித்த நாட்கள் நினைவுகளை பகிர்ந்த கண்ணன் அய்யர்

நுாலகத்தில் புத்தகங்கள் படித்த நாட்கள் நினைவுகளை பகிர்ந்த கண்ணன் அய்யர்


UPDATED : ஜூன் 16, 2026 05:34 PM

ADDED : ஜூன் 16, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 05:34 PM ADDED : ஜூன் 16, 2026 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
“சிறுவனாக இருந்த போது, நுாலகத்தில் புத்தகங்கள் படித்த நாட்களை மறக்க முடியவில்லை,” என, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்தில், 'தினமலர்' வாசகர் கண்ணன் அய்யர் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தின் புத்தக பூங்கா நுாலகத்திற்கு, மல்லேஸ்வரத்தில் வசிக்கும் 'தினமலர்' வாசகர் கண்ணன் அய்யர் நேற்று வந்தார். சில புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

அவர் கூறியதாவது:


கடந்த 1981ம் ஆண்டில் இருந்தே 'தினமலர்' படிக்கிறேன். ஒரு நாள் படிக்கவில்லை என்றால் கூட, ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வாக இருக்கும்.

எனது சொந்த ஊரான தமிழகத்தின் கடலுார் மாவட்டம் பண்ருட்டி சென்றால் கூட 'தினமலர்' வாங்கி விடுவேன்.

சிறுவயதில் இருந்தே நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க நுாலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. நுாலகத்திற்கு சென்று புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்தது மறக்க முடியாத நினைவாக உள்ளது.

அந்துமணியின் பா.கே.ப.,வின் தீவிர ரசிகன் நான். இப்போதும் தினமும் ஒரு மணி நேரம் புத்தகங்கள் படிக்கிறேன். இன்றைக்கு உலகில் நடக்கும் விஷயங்கள் பற்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள் கூறியுள்ளன. பெங்களூரில் இந்த நுாலகம் அமைக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு பிளஸ் பாயின்ட்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்


வாரத்தின் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us