இளைஞர்கள் யோகாவை விரும்பி கற்பது மகிழ்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்!
இளைஞர்கள் யோகாவை விரும்பி கற்பது மகிழ்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்!
UPDATED : ஜூன் 18, 2026 10:24 AM
ADDED : ஜூன் 18, 2026 10:26 AM
புதுடில்லி:
இளைஞர்கள் யோகாவை விரும்பி கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு உலகம் தயாராகி வரும் வேளையில், பிரதமர் மோடி, ஸ்லோவாக்கியாவின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் இணைந்து, ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய யோகாவை கண்டு களித்தனர்.
இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:
ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் செய்த யோகாவை கண்டு நானும் அதிபர் பெல்லெக்ரினியும் மகிழ்ச்சி அடைந்தோம். உலகம் சர்வதேச யோகா தினத்தை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இளைஞர்கள் யோகாவை விரும்பி கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், நல்வாழ்வுக்கு யோகா மக்களை ஒன்றிணைப்பதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
