பள்ளி கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும்: அமைச்சர் கமலி அறிவுரை
பள்ளி கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும்: அமைச்சர் கமலி அறிவுரை
UPDATED : ஜூலை 05, 2026 11:26 AM
ADDED : ஜூலை 05, 2026 11:27 AM
அன்னூர்:
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, பசூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அமைச்சர், தலைமை ஆசிரியரிடம், “கழிவறை சுத்தமாக இல்லை. தினமும் சுத்தம் செய்ய வேண்டும்,” என்றார்.
அதற்கு தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம், “தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அரசுக்கு எழுதி உள்ளோம். எங்களது சொந்த பணத்தில் ஆள் வைத்து சத்தம் செய்து வருகிறோம். இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. வகுப்பறைகள், அங்கன்வாடி கட்டடம் அபாய நிலையில் உள்ளது. இடித்து அகற்ற வேண்டும்,” என்றார்.
இதையடுத்து அன்னூர் வடக்கு துவக்கப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியைகள், “பள்ளி வகுப்பறைகள் மோசமாக உள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை” என்றனர்.
ஆய்வில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, தாசில்தார் ஜெயபாரதி, த.வெ.க., ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
