மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது; அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
UPDATED : ஜூலை 27, 2026 07:18 AM
ADDED : ஜூலை 27, 2026 07:18 PM

திருப்பரங்குன்றம்:
“மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க., அரசு உள்ளது” என அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.
மதுரை திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரில் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கி அவர் பேசியதாவது:
மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தர முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார். தேவையான ஊக்கமும், அவர்களுக்கான நல்ல திட்டங்களையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க., அரசு உள்ளது.
மாணவர்கள் கடுமையான போராட்டத்தில், கடும் போட்டிகள் நிறைந்த உலகத்தில் உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் நன்றாக படிப்போர் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. சிறந்த முயற்சி எடுத்து சிறப்பாக படித்து மேன்மை அடைய வேண்டும்.
இவ்வாறு நிர்மல் குமார் பேசினார்.
