தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார்


UPDATED : ஆக 11, 2026 04:11 PM

ADDED : ஆக 11, 2026 04:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 04:11 PM ADDED : ஆக 11, 2026 04:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஞ்சி:
ஜார்கண்டில் அரசு பணியாளர் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்றனர். அவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி முதல் ராஞ்சியில் நடக்கும் போராட்டம், 17வது நாளை எட்டி உள்ளது.

ஆக., 10 மாணவர்கள் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். அதனை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி சென்றனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் மாணவர்கள் சட்டசபையை நெருங்கி சென்றதால், அவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.

முற்றுகை

இதற்கிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு எதிர்க்கட்சி தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

கைது


இந்நிலையில் தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டேவை சி.ஐ.டி., போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கண்டனம்


மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக போலீசாரை பயன்படுத்தியது தவறு. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது. பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்வு ஏற்படுத்த முடியும். மாணவர்களின் பிரச்னையை கேட்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த மாநில அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us