தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களே நாட்டின் உழைக்கும் சக்தி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத் பேச்சு

இளைஞர்களே நாட்டின் உழைக்கும் சக்தி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத் பேச்சு

இளைஞர்களே நாட்டின் உழைக்கும் சக்தி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத் பேச்சு


UPDATED : ஆக 17, 2026 10:27 AM

ADDED : ஆக 17, 2026 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 10:27 AM ADDED : ஆக 17, 2026 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாக்பூர்:
“இளைஞர்களே நாட்டின் உழைக்கும் சக்தி. அவர்களை சரியாக வழிநடத்தினால், நாடு பெரிதும் பயனடையும். இல்லையெனில், எதிர் காலத்தில் அது சமூகத்தின் மீது ஒரு சுமையாக மாறிவிடும்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

நம் நாடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை, நாட்டின் இளைஞர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நம் சொந்த அளவுகோல்களை நாமே உருவாக்க வேண்டும். இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு பெரும் சொத்து.

அவர்களை நாம் சரியாக கையாண்டால் பெரிதும் பயனடைவோம்; இல்லாவிட்டால், சமூகத்துக்கு அது சுமையாகிவிடும். இளைஞர்களே எதிர்காலத்தில் வருமானம் ஈட்டும் சக்தியாக மாறப் போகின்றனர்.

வேலைவாய்ப்பு என்பது அலுவலகப் பணிகளை மட்டும் குறிப்பதல்ல; உடல் உழைப்பு வேலை செய்பவர்களையும் உள்ளடக்கியது. அந்த உழைப்புக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

தவறான பார்வையால் உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நம் பார்வை மற்றும் சமநிலை மூலம், உலகிற்கு எதிர்கால பாதையை காட்டுவது, நம் நாட்டின் கடமையாகும்.

நம் தேசியக் கொடி எதை பிரதிபலிக்கிறது என்பதையும், நம் நாட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல எவ்வளவு முயற்சிகள் தேவைப்படும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான புவியியல் பரப்பளவு காரணமாக, கனடா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பின்பற்றும் அணுகுமுறையை நம்மால் கண்மூடித்தனமாக பின்பற்ற முடியாது.

குறைந்த மக்கள் தொகை, பரந்த நிலப்பரப்பு அல்லது அபரிமிதமான இயற்கை வளங்களை உடைய நாடுகள், வேலைவாய்ப்பு குறித்து மட்டும் சிந்தித்தால் போதுமானதாக இருக்கலாம்.

ஆனால், நம் பிரச்னைகளுக்கு முற்றிலும் தனித்துவமான சிந்தனை முறை தேவைப்படுகிறது. அதற்காக நாம் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us