தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள்: செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள்: செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள்: செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்


UPDATED : ஆக 23, 2026 04:34 PM

ADDED : ஆக 23, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 04:34 PM ADDED : ஆக 23, 2026 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தரவுகள் வெவ்வேறு துறைகளில் தனித்தனியாக சேகரிக்கப்படுவதைத் தவிர்த்து, அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள், என செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் மத்திய அரசின் செயலாளர்களுடன் நடந்த உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார். உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள், மற்றும் பிற நிர்வாக அம்சங்கள் தொடர்பான அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

தரவுகள் தேசத்தின் சொத்து; தரவுகள் வெவ்வேறு துறைகளில் தனித்தனியாக சேகரிக்கப்படுவதைத் தவிர்த்து, அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்; ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தொலைநோக்கு சிந்தனையுடன் செயலாளர்கள் சிந்திக்க வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் போது, இறுதி முடிவு எடுப்பதில் மனிதர்களின் தலையீடு எப்போதும் மையமாக இருக்க வேண்டும்.

அமைச்சகங்கள் தங்களுக்குள் தனித்து இயங்கும் முறையை கைவிட்டு, இணைந்து செயலாற்ற வேண்டும். உடனடி இலக்குகளைத் தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை நீண்ட கால அடிப்படையில் வடிவமைக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்.

கொள்கை வகுப்பதில் புதிய கண்ணோட்டங்களைக் கொண்டுவர, அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிக ஈடுபாடு தேவை; பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர்களுடனான ஈடுபாடு, புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளைக் கொண்டுவர முடியும்.

பாதுகாப்புத் துறை உட்பட, ஆராய்ச்சி உள்ளிட்டவை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்துறையை மேலும் வலுப்படுத்தி, உலக அளவில் அதனை அதிக போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us