தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் நெருக்கடி

மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் நெருக்கடி

மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவ கல்லுாரிகள் நெருக்கடி


UPDATED : செப் 07, 2026 09:47 AM

ADDED : செப் 07, 2026 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 09:47 AM ADDED : செப் 07, 2026 09:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தனியார் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் கட்டணம் கேட்டு வலியுறுத்தப்படும் நிலையில், அதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை, சிறப்பு கமிட்டி வாயிலாக, தமிழக அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாய் வரை ஒரு மாணவரிடம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம்.

மேலும், விடுதி, உணவு, பஸ் வசதிக்கு, 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தனியொரு மாணவரிடம் வசூலிக்கின்றனர். ஆனால், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை தாண்டி, தனியார் மருத்துவ கல்லுாரிகள் தரப்பில், கணக்கில் வராத வகையில், 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, த.வெ.க., ஆட்சியில், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ஐந்து தனியார் மருத்துவ கல்லுாரிகள் மீது குற்றஞ்சாட்டிய நிலையில், நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை.

எனவே, மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் விசாரணையை தீவிரப்படுத்தவில்லை. இந்நிலையில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வி கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு பெற்றோருக்கு நெருக்கடி தரப்படுகிறது.

இது குறித்து, பெற்றோர் தரப்பில் கூறியதாவது:

கடந்த ஆட்சிகளில், கல்வி கட்டணத்துடன், 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, குறுஞ்செய்தி வரும். அதை வைத்து புகார் அளித்தாலும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்தால் கூடுதல் கட்டணம் இருக்காது என நம்பினோம்.

ஆனால், கல்வி கட்டணத்துடன் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதில், கூடுதல் கட்டணம் எவ்வளவு என்று வெளிப்படையாக தெரிவிக்காமல், நேரில் வந்து பாருங்கள் என சொல்கின்றனர்; இது தான் மாற்றம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் பதில் என்ன?

மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

சில சுயநிதி கல்லுாரிகள் மீது புகார்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரம், நீதிமன்றத்தில் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. பெற்றோரும் எவ்வித தயக்கமின்றி புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us