தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவனங்களில் உணவு புகார் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

கல்வி நிறுவனங்களில் உணவு புகார் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

கல்வி நிறுவனங்களில் உணவு புகார் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு


UPDATED : செப் 17, 2026 02:07 PM

ADDED : செப் 17, 2026 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 02:07 PM ADDED : செப் 17, 2026 02:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், கல்வி நிறுவனங்கள், விடுதி உரிமையாளர்களுக்கு சமீபத்தில் உணவு மேற்பார்வையாளர் பயிற்சி வழங்கியது.

இத்துடன் பள்ளி, கல்லுாரி, விடுதிகளில் ஆய்வு நடத்தி விதிமீறல்கள் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டது.

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறுகையில், 'பள்ளி, கல்லுாரி விடுதிகளில் முறையாக பூச்சி கட்டுப்பாடு மேலாண்மை செய்யாததால், உணவில் புழு, கரப்பான் பூச்சி இருப்பதாக தான் அதிக புகார்கள் வருகின்றன. இதற்காக, சேமிப்பு கிடங்கு பராமரிக்கும் முறை குறித்த பல்வேறு வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டது.

ஆய்வில் உரிய விதிமுறைகள் பின்பற்றாத நிறுவனங்களுக்கு உடனடி அபராதம், நோட்டீஸ் வழங்கப்படும். இத்துடன் அனைத்து விடுதிகளிலும், உணவு புகார் எண் குறித்த அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களும் உணவு சார்ந்த புகார்களை, 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ, unavupukar@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அளிக்கலாம்' என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us