தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


UPDATED : செப் 23, 2026 12:07 AM

ADDED : செப் 23, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 12:07 AM ADDED : செப் 23, 2026 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
'ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், வேலை அளிக்கும் முதன்மை நிறுவனத்துக்கும் இடையே, நேரடியாக முதலாளி - தொழிலாளி உறவு இல்லாத நிலையில், அந்த தொழிலாளர்களுக்கு, 'கிராஜுவிட்டி' எனப்படும், பணிக்கொடை தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டியதில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., எனப்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட், உத்தரகண்டின் டேராடூனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேல்முறையீடு

நம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கண்டறிந்து ஆய்வு செய்யும் பணியை, இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்திலும், இதன் கீழ் இயங்கும் துணை நிறுவனங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர பணியாளர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு கிராஜுவிட்டி தொகை வழங்க, ஓ.என்.ஜி.சி.,யிடம் கோரினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பணிக்கொடை வழங்குதல் சட்டத்தின் கீழ் செயல்படும் கட்டுப்பாட்டு ஆணையம், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கிராஜுவிட்டி தொகையை வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு ஆணையம், கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து மஹாராஷ்டிராவின் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் மேல்முறையீடு செய்தனர். கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அந்த தொகையை வழங்க உத்தரவிட்டது.

பொறுப்பு


இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் முறையிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஹ்சனுதீன் அமனுல்லா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் விபரம்:

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கிராஜுவிட்டி தொகையை கணக்கிடுவது மட்டுமே கட்டுப்பாட்டு ஆணையத்தின் கடமை. அந்த தொகையை யார் வழங்குவது என்று தீர்மானிக்கும் பொறுப்பு ஆணையத்துக்கு இல்லை.

ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை வழங்கிய நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில், இருதரப்புக்கும் இடையே முதலாளி - தொழிலாளி உறவு இல்லை என்பது தெளிவாகிறது.

ரத்து


எனவே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், வேலை அளிக்கும் முதன்மை நிறுவனத்துக்கும் இடையே நேரடியாக முதலாளி - தொழிலாளி உறவு இல்லாத நிலையில், அந்த தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி தொகையை வழங்கும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்க வேண்டியதில்லை.

இந்த விவகாரத்தில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கிராஜுவிட்டி தொகையை ஓ.என்.ஜி.சி., நிறுவனம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. தொழிலாளர்களின் கைகளுக்கு அந்த தொகை சென்றுவிட்டதால், அதை அந்நிறுவனம் திரும்ப பெற முடியாது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, எதிர்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கிராஜுவிட்டி தொகையை தங்களை நேரடியாக பணியமர்த்திய ஒப்பந்ததாரர்களிடம் மட்டுமே கோர முடியும், வேலை தரும் முதன்மை நிறுவனத்திடம் இருந்து கோர முடியாது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us