தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் துவங்குவதற்கான விதிகளில் சீர்திருத்தம்: நிர்வாக முறையல்ல; நம்பிக்கையே அடிப்படை

தொழில் துவங்குவதற்கான விதிகளில் சீர்திருத்தம்: நிர்வாக முறையல்ல; நம்பிக்கையே அடிப்படை

தொழில் துவங்குவதற்கான விதிகளில் சீர்திருத்தம்: நிர்வாக முறையல்ல; நம்பிக்கையே அடிப்படை


UPDATED : அக் 29, 2026 01:12 PM

ADDED : அக் 29, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 01:12 PM ADDED : அக் 29, 2026 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடெல்லி:
நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில், அனுமதி அடிப்படையிலான நிர்வாக முறையிலிருந்து நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கு மாறும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஆதரவு, விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீட்டுக்கான தளர்வுகள் மற்றும் டிஜிட்டல் ஒற்றை சாளர அனுமதி முறை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையான, டி.பி.ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள தகவலின்படி , நாடு முழுதும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப் படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், தொழில் நிறுவனங்களின் இணக்கச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற் றுக்கும் இந்த சீர்திருத்தங்கள் உதவுகின்றன.

கடன் உத்தரவாதம்


ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுத் தப்படும் ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதி திட்டத்தின் கீழ், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 நிறுவன மையங்கள் வாயிலாக 4,194 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 776 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2,147 நிறுவனங்கள் பெண்களால் வழிநடத்தப்படுபவை. மேலும் , இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த 2,356 நிறுவனங் களும் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.

சீர்திருத்தங்கள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க 63 ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் ஏஞ்சல் வரி ரத்து, பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குகளுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரிவிதிப்பை சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஒற்றைச்சாளர அனுமதி


தொழில் நிறுவனங்கள் பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதிகளைத் தனித்தனியாக பெற வேண்டிய நடைமுறையை குறைப்பதற்காக, தேசிய ஒற்றைச்சாளர என்.எஸ்.டபிள்யூ.எஸ்., தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் இதுவரை 15.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

22 மொழிகளில் சேவை

தொழில் தொடங்க விரும்புவோர் தங்களுக்கு தேவையான அனுமதிகள் எவை என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில், 'உங்கள் அனுமதிகளை அறிந்துகொள்ளுங்கள்' என்ற வசதி தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேரடி அனுமதி குறைப்பு

ஒற்றைச்சாளர அமைப்பு அனுமதிகளை ஒருங்கிணைப்பதுடன், தேவையற்ற அனுமதி நடைமுறைகளை நீக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஒரே முறை உள்நுழைவு, ஒருங்கிணைந்த தொழில் அடையாள எண், பொதுவான விண்ணப்ப படிவங்கள், இணையவழி கட்டணங்கள், ஆய்வு மேலாண்மை, விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல், கு றை தீர் வசதி மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற அம்சங்களை இந்த அமைப்புகளில் இடம்பெற செய்வது இதன் நோக்கமாகும்.

எளிய நிர்வாகம்

தொழில் தொடங்குவதற்கான நடைமுறை சிக்கல்களை குறைத்தல், நேரடி அலுவலக தொடர்புகளை குறைத்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவைகளை வழங்குதல் ஆகியவை இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த நடவடிக்கைகள், தொழில் தொடங்குவதையும், நிறுவனங்களை விரிவுபடுத்துவதையும், புதிய முதலீடுகளை மேற்கொள்வதையும் எளிதாக்குவதுடன், வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதற்கும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us