தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: இந்தூர் ஐ.ஐ.எம்., அறிவிப்பு

கேட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: இந்தூர் ஐ.ஐ.எம்., அறிவிப்பு

கேட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: இந்தூர் ஐ.ஐ.எம்., அறிவிப்பு


UPDATED : நவ 07, 2026 11:00 AM

ADDED : நவ 07, 2026 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 11:00 AM ADDED : நவ 07, 2026 11:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தூர்:
இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வி மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வான 'கேட் 2026' தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இந்தூர் ஐ.ஐ.எம்., நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னணி மேலாண்மைக் கல்லூரிகளில் 2027 - 28ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. முன்னதாக நவம்பர் 4ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட அட்டவணையின்படி நவம்பர் 6 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?


'கேட் 2026' கணினி வழித் தேர்வு வரும் நவம்பர் 29ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் மூன்று வேளைகளாக நடைபெற உள்ளது. தேர்வு நாளான நவம்பர் 29 வரை மாணவர்கள் இணையதளத்தில் (iimcat.ac.in) தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று வழித்தடங்களைத் தெரிந்து கொள்ளுமாறும், கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்குமாறும் தேர்வு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மாணவர்களின் பயிற்சி வசதிக்காக இணையதளத்தில் மாதிரித் தேர்வும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us