தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இமாலய ஊழலில் ஒருவரும் தப்ப முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்

இமாலய ஊழலில் ஒருவரும் தப்ப முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்

இமாலய ஊழலில் ஒருவரும் தப்ப முடியாது: அமைச்சர் ராஜ்மோகன்


UPDATED : நவ 11, 2026 03:40 PM

ADDED : நவ 11, 2026 03:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 03:40 PM ADDED : நவ 11, 2026 03:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
“நுாலக ஊழல் இமாலய ஊழல்; ஒருவரையும் தப்ப விட மாட்டேன். த.வெ.க., ஆட்சியில் ஒரு நுால் கூட வாங்கப்படவில்லை,” என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் விஜய் ஆட்சியில் பாரபட்சம் இருக்காது. போதை புழக்கம் ஒழிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும். கடந்த கால குற்றங்கள் குறித்து, நான் சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கடந்த காலத்தை விட, தற்போது காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சென்னை கன்னிமரா நுாலகத்திலேயே, 523 போலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்வது போல், கள்ள புத்தகங்களை பிடித்தது வேதனையாக இருக்கிறது. மதுரை கலைஞர் நுாலகத்தில், ஒரு ஆய்வு புத்தகம் வைத்திருந்தனர். அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர், 'நான் அப்படிப்பட்ட புத்தகமே எழுதவில்லை' என கூறுகிறார்.

காலம் காலமாக அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெயரையும், பகுத்தறிவையும் பேசி பேசி, ஈ.வெ.ரா., நுாலகத்திலேயே விபூதி அடித்திருக்கின்றனர். ஒரு தவறான பதிப்பகத்தினரால், மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது. டிசம்பரில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும். என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, ஒரு குழு உருவாக்கப்படும்.

நுாலக ஊழலை, இமாலய ஊழலாக பார்க்கிறேன். அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, சட்டத்தின் ஓட்டை வழியாக வெளியே வராத வகையில் எடுக்கப்படும்.

முதல்வர் விஜய் ஆட்சியில், எம்.எல்.ஏ., அமைச்சர் யாராக இருந்தாலும் தீவிர விசாரணை நடத்தப்படும். த.வெ.க., ஆட்சியில், ஒரு நுால் கூட கொள்முதல் செய்யப்படவில்லை. இது வரை தமிழக நுாலகங்களில் இருப்பது, எல்லாமே கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டவை. நுால்கள் ஊழலில் ஒரு குற்றவாளியை கூட தப்பிக்க விட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us