ஆட்குறைப்பு நடவடிக்கையில் குவால்காம் நிறுவனம்; ஊழியர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?
ஆட்குறைப்பு நடவடிக்கையில் குவால்காம் நிறுவனம்; ஊழியர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?
UPDATED : நவ 12, 2026 10:56 AM
ADDED : நவ 12, 2026 10:57 AM
புதுடில்லி:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு குவால்காம் என்ற நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது. சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.
சமீபத்தில் அதன் தலைமை செயல் அதிகரி கிறிஸ்டியானோ அமோன் நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் நோக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என அறிவித்து இருந்தார். எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தியாவிலும் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தெரிந்தாலும், உண்மையான எண்ணிக்கை அதை விட குறைவாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு பணி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் வந்துள்ளது.
என்ன காரணம்?
மின்னணு பொருட்களுக்கான தேவை குறைவு மற்றும் மெமரி சிப்களின் விலை ஆகியவை ஸ்மார்ட் போன் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏ.ஐ., டேட்டா சென்டர், வாகன தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் குவால்காம் முதலீடுகளை அதிகரிக்கிறது. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையை துவக்கி உள்ளது.
எவ்வளவு கிடைக்கும்?
1. அடிப்படை இழப்பீடாக இரண்டு வாரத்திற்கான மொத்த சம்பளம்.
2. நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக இரண்டு வார சம்பளம்.
3. முழுமையடையாத பணிக்காலத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் இழப்பீடு.
4. மருத்துவக் காப்பீட்டிற்கான மொத்தத் தொகை.
5. குறிப்பிட்ட காலத்திற்குள் பணி விலகல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் கூடுதலாக ஒரு மாத சம்பளம்.
6. இரண்டு நாட்களுக்குள் பணி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டால் கூடுதல் பணம் கிடைக்கும். இருப்பினும் தனிப்பட்ட ஒப்பந்தத்தை பொறுத்து இது மாறுபடும்.
