திருச்சுழி அரசு பள்ளியில் இடிந்து விழுந்த கூரை: தப்பிய மாணவர்கள்
திருச்சுழி அரசு பள்ளியில் இடிந்து விழுந்த கூரை: தப்பிய மாணவர்கள்
UPDATED : நவ 17, 2026 05:47 PM
ADDED : நவ 17, 2026 05:48 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரேந்தல் ஊராட்சி துவக்கப் பள்ளியின் கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் பிரார்த்தனைக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
காரேந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 32 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நேற்று காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டிருந்த போது வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்தது.
கற்களும் மண்ணும் கிழே கொட்டியது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை பாதுகாப்பாக வேறு வகுப்பறையில் அமர வைத்தனர்.
