தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே இடத்தில் உயர்கல்வி தகவல்கள் - மாணவர்கள் பெருமிதம்

ஒரே இடத்தில் உயர்கல்வி தகவல்கள் - மாணவர்கள் பெருமிதம்

ஒரே இடத்தில் உயர்கல்வி தகவல்கள் - மாணவர்கள் பெருமிதம்


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்ததால், சிரமம் இல்லாமல் ஒரே இடத்தில் உயர் கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டோம்" என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


மாணவர்களின் கருத்து: எம்.ரிஸ்வானா, மதுரை: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். இங்கு வந்த பிறகு தான் நிறைய படிப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். "பயோ டெக்னாலஜி" பற்றி அறிய முடிந்தது. கல்லூரிகளின் ஸ்டால்கள் பயனுள்ளதாக இருந்ததால், என் தோழியரையும் வரச் சொல்லி உள்ளேன்.


ஆர்.ஜெயலட்சுமி, மதுரை: மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பது என் விருப்பம். அது கிடைக்காவிட்டால், பயோ டெக்னாலஜி படிக்கலாம் என நினைக்கிறேன்.


பி.ராஜேஷ்குமார், அனுப்பானடி: பிளஸ்2 வில் பொது இயந்திரவியல் முடித்துள்ள நான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மெரைன் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுகிறேன். எதைப் படித்தாலும் அதிக மதிப்பெண் எடுத்தால், வேலை கிடைக்கும் என்பதை, இங்கு வந்ததால் புரிந்து கொண்டேன். சிரமம் இல்லாமல், எளிதாக ஒரே இடத்தில் உயர்கல்வி தகவல்கள் கிடைத்தன.


எம்.முத்துமலர் ஆர்த்தி, மதுரை: பல்வேறு படிப்புகளைப் பற்றிய கருத்தரங்கு, பயனுள்ளதாக இருக்கிறது. சொன்னபடி, சரியான நேரத்திற்கு நிகழ்ச்சி துவங்கியது, ஆச்சரியமாக இருந்தது. பி.இ., ஐ.டி., படிக்க விரும்புகிறேன். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல விழிப்புணர்வு கிடைத்தது.


எஸ்.மவுனியா, பெரியகுளம்: என் அண்ணன் ஐ.டி. படிக்கிறார். எனவே நானும் அதையே படிக்க விரும்புகிறேன். விஷூவல் கம்யூனிகேஷன் பற்றி இங்கு வந்ததால் தெரிந்து கொண்டேன்.


கே.முத்துலட்சுமி, திண்டுக்கல்: வேலை வாய்ப்பு இருப்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். எனது இஷ்டம் போல் எது வேண்டுமானாலும் படித்துக்கொள் என பெற்றோர் கூறி விட்டனர். நிறைய படிப்புகள் பற்றி, தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்தேன். எதிர்பார்த்தது நிறைவேறியது.


எஸ்.ஹரிணி, மதுரை: எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்க விருப்பம். இதைத் தான் படிக்க வேண்டும் என பிளஸ்1 லேயே முடிவு செய்தேன். இங்க வந்ததால் மேலும் பல சந்தேகங்கள் தீர்ந்தன.


எஸ்.கவிதா, மதுரை: வழிகாட்டி துவங்கிய முதல் நாளே வந்து கல்லூரிகளின் ஸ்டால்களை பார்வையிட்டேன். பயனுள்ளதாக இருந்ததால் மீண்டும் எனது தோழியரை அழைத்து வந்துள்ளேன். அவர்களும் புதிய படிப்புகள் பற்றி அறிந்து கொண்டனர்.


ஆர்.ரம்யா ஜெனிபர் கிரேஸ்: எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் படிப்பது கொஞ்சம் சிரமம். எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். எனது அக்காவும் அதையே படிக்கிறார். இங்கு, பல்வேறு கல்லூரிகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us