தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைதூரக் கல்வி பரவ வேண்டும் - கபில் சிபல்

தொலைதூரக் கல்வி பரவ வேண்டும் - கபில் சிபல்

தொலைதூரக் கல்வி பரவ வேண்டும் - கபில் சிபல்


UPDATED : ஏப் 04, 2011 12:00 AM

ADDED : ஏப் 04, 2011 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2011 12:00 AM ADDED : ஏப் 04, 2011 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து 70 லட்சம் மாணவர்களுக்கு உயர் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருந்ததாக மத்திய மத்திய மனித வள அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.


டெல்லியில் நடந்த இந்திரா காந்தி திறந்தநிலை தேசிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், மத்திய அரசு நிர்ணயித்திருந்த லட்சியத்தை தொலைதூரக் கல்வி மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.


தொலைதூரக் கல்வி, நாட்டின் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் அதிகம் பிரபலமானதாக உள்ளது. தொலைதூரக் கல்வி நாடு முழுவதும் பரவ வேண்டும். வரும் காலத்தில் இந்திய அளவில் படித்தவர்களின் விழுக்காடு குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us