தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி


UPDATED : ஏப் 20, 2026 10:48 PM

ADDED : ஏப் 20, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 10:48 PM ADDED : ஏப் 20, 2026 10:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் எஸ்.எஸ்.கே., இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர் சாதனையாக இந்தாண்டும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருக்கோவிலுார் எஸ்.எஸ்.கே., இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதல் மாணவனாக பிரபஞ்சன், 475; மதிப்பெண்களும், ஜனரஞ்சனி, 473; யாழினி, 470; செந்தமிழ்செல்வன், 467; ஜனனி, 463; மதிப்பெண்கள் பெற்று முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் செந்தில், தாளாளர் அஷ்வின் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி பரிசளித்தனர்.

அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் மகாலட்சுமி, நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.

இத்தேர்வில், 8 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 10 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றிக்கு பாடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us