தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 20ம் தேதி வரை நீட்டிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 20ம் தேதி வரை நீட்டிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 20ம் தேதி வரை நீட்டிப்பு


UPDATED : ஏப் 14, 2026 06:23 PM

ADDED : ஏப் 14, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2026 06:23 PM ADDED : ஏப் 14, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, அரசு பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் 388 யு.டி.சி., பணியிடங்களுக்கு மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரையிலும், 58 எல்.டி.சி., பணியிடங்களுக்கு மார்ச் 23 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற சூழலில், கடந்த 4ம் தேதி முதல் 10 ம்தேதி அரசின் இணையதளத்தில் விண்ணப்பம் பெறவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முயன்றும், இணையதளத்திற்குள் நுழைய முடியாமல் தவித்தனர். காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இது தொடர்பாக, தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன், நிர்வாக சீர்த்திருத்த துறையின் தேர்வாணையத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், வரும் 20ம் தேதி மாலை 3 மணி வரை, அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள என நிர்வாக சீர்திருத்த துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us