தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் வழிகாட்ட விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம்! 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்'

பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் வழிகாட்ட விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம்! 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்'

பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் வழிகாட்ட விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம்! 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்'


UPDATED : செப் 24, 2025 08:56 AM

ADDED : செப் 24, 2025 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2025 08:56 AM ADDED : செப் 24, 2025 08:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' இணைந்து வழங்கும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சி, அக்டோபர் 2ல், சென்னையின் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

வித்யாரம்பம் நெல் மணியில், குழந்தையின் கையால் அகரம் எழுதி வித்யாரம்பம் செய்வது, விஜயதசமி நன்னாளில் தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின், 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.

நடக்கும் இடம் சென்னை படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள் ளி, சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் என ஐந்து இடங்களில், அக்., 2ம் தேதி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். இதற்கான முன்பதிவு, தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது.

முன்பதிவு செய்து இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'டி - ஷர்ட்' உடன், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் சேனல் பார்ட்னர், 'ஜனம்' தொலைக்காட்சி.

வடபழனி ஆண்டவர் கோவில் மற்றும் தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில், முன்பதிவு நிறைவடைந்து விட்டது. நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், பல்வேறு துணை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்


நிகழ்ச்சியில், டாக்டர்கள் செங்கோட்டுவேலு, ஜெயராஜா, விஜயகுமார், ஏ.வி.ஸ்ரீனிவாசன், விஞ்ஞானி டில்லி பாபு, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, கணிதவியலாளர் சடகோபன் ராஜேஷ், பவன்ஸ் பள்ளி முதல்வர் சுப்ரமணியம், நடேசன் பள்ளி தாளாளர் ராமசுப்ர மணியன். சங்கரா பள்ளி தாளாளர் சங்கர், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஆன்மிக பேச்சாளர் நாகை முகுந்தன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், ஆதலையூர் சூரியகுமார், பிரபுசங்கர், முன்னாள் டி.ஜி.பி., - கே.வி.கே.ஸ்ரீராம், தர்ம பிரபோதனா அறக்கட்டளை அறங்காவலர் சீதாராமன் கிரி, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், ஜோதிடர்கள் ஹரிகேசநல்லுார் வெங்கட்ராமன், பாரதிஸ்ரீதர், ஆன்மிக பாடகர் வீரமணி ராஜு, வில்லிசை கலைஞர் பாரதி திருமகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us