தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுதும் நாளை நீட் நுழைவு தேர்வு புதுச்சேரியில் 4,440 பேர் எழுதுகின்றனர்

நாடு முழுதும் நாளை நீட் நுழைவு தேர்வு புதுச்சேரியில் 4,440 பேர் எழுதுகின்றனர்

நாடு முழுதும் நாளை நீட் நுழைவு தேர்வு புதுச்சேரியில் 4,440 பேர் எழுதுகின்றனர்


UPDATED : மே 02, 2026 04:22 PM

ADDED : மே 02, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 04:22 PM ADDED : மே 02, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பிராந்தியத்தில் நாளை 9 தேர்வு மையங்களில் நடக்கும் நீட் நுழைவு தேர்வினை 4,440 பேர் எழுதுகின்றனர்.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாளை நாடு முழுதும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. 26 லட்சம் பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் இருந்தும் 7 ஆயிரத்திற்கும் மேல் நீட் எழுத விண்ணப்பித்துள்ளனர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் 9 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 4,440 பேர் எழுத உள்ளனர். அதிகபட்சமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 960 பேர் எழுதுகின்றனர்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் - 720 பேர், கோரிமேடு ஜிப்மர் கேந்திரியா வித்தியாலயா பள்ளியில் - 480, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி - 240, நவோதயா வித்யாலயா பள்ளி - 240, சின்னத்தா அரசு பெண்கள் பள்ளியில் - 480, திருவள்ளுவர் அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளி - 480, வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியியில் 480, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியில் - 360 பேர் நீட் தேர்வினை எதிர்கொள்ள உள்ளனர்.

நீட் தேர்வினையொட்டி பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆடைகள் தேர்வர்கள் அரைக்கை கொண்ட வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கக் கூடாது.

காலணிகள், குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தைக் கொண்டும் ஷூக்கள் அணியக் கூடாது.

ஆபரணங்களுக்கு தடை தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக் கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ ஆபரணங்களையோ அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலாசார ஆடைகள் தங்கள் மத அல்லது கலாசார ரீதியான குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் மொபைல் போன்கள், புளூடூத் கருவிகள், இயர்போன்கள், மைக்ரோபோன்கள், பேஜர்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ் மற்றும் எரேசர் உள்ளிட்ட எந்த ஸ்டேஷனரி பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது.

பர்சுகள், கூலிங் கிளாஸ்கள், ஹேண்ட் பேக்குகள், பெல்ட்கள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us