மாநகராட்சி பள்ளி மாணவியர் பெற்ற ஒரு தங்கம், 5 வெண்கல பதக்கங்கள்
மாநகராட்சி பள்ளி மாணவியர் பெற்ற ஒரு தங்கம், 5 வெண்கல பதக்கங்கள்
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 10:31 AM
கோவை:
மாநில அளவிலான ஜூடோ போட்டியில், கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் ஒரு தங்கம், ஐந்து வெண்கல பதக்கங்களை வென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. அதில், கோவை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், ஒரு தங்கம் மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்களை வென்று, மாநகராட்சிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி நந்தினி தங்கப்பதக்கம், 12ம் வகுப்பு மாணவியர் ரக்சனா, சுஜானா ஸ்ரீ, 10ம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷா ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். இதேபோல், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி ஹாசிக்கா, ஒன்பதாம் வகுப்பு மாணவி திஷ்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இம்மாணவியரை, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.