தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் கட்ட சேர்க்கை பட்டியல் புதுச்சேரி பல்கலை வெளியீடு 9ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

இரண்டாம் கட்ட சேர்க்கை பட்டியல் புதுச்சேரி பல்கலை வெளியீடு 9ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

இரண்டாம் கட்ட சேர்க்கை பட்டியல் புதுச்சேரி பல்கலை வெளியீடு 9ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்


UPDATED : ஆக 09, 2026 12:53 PM

ADDED : ஆக 09, 2026 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 12:53 PM ADDED : ஆக 09, 2026 12:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
இரண்டாம் கட்ட சேர்க்கை பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டு, கட்டணம் கட்ட அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான 4 ஆண்டுக் கால இளநிலை மற்றும் 5 ஆண்டுக் கால ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான 2ம் கட்டத் தேர்வுப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக சேர்க்கை இணையதளமான https:admissions.pondiuni.edu.in வாயிலாக தங்களது கணக்கில் உள்நுழைந்து வரும் 9ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் படித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்துவதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

குறித்த தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த தவறினால், அவருக்கான சேர்க்கை வாய்ப்பு ரத்து செய்யப்படும். காலியாகும் அப்பணியிடங்கள் பல்கலைக்கழக விதிகளின்படி அடுத்தகட்ட சேர்க்கை நடைமுறைகள் மூலம் நிரப்பப்படும் என்று பல்கலைகழகம் எச்சரித்துள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் நிகழ்நேரப் புதுப்பிப்புகளுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்ந்து பார்வையிடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us