"கல்வி, மருத்துவம் இரண்டும் எளிமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும்"
"கல்வி, மருத்துவம் இரண்டும் எளிமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும்"
UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM
ADDED : ஜூன் 27, 2014 10:58 AM
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் அடுத்த, க.ஆண்டியார்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் உடற்பயிற்சி கூடம், காணொளி காட்சி மையம், விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடந்தது.
வில்லியனுார் வட்டம் -5 பள்ளி துணை ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் பாட்சா நோக்கவுரையாற்றினார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வல்லவன், முதன்மைக் கல்வி அதிகாரி கலைச்செல்வன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பழனிசாமி வாழ்த்தி பேசினர்.
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, ராதாகிருஷ்ணன் எம்.பி., பேசும்போது, &'&'கல்வி, மருத்துவம் இவை இரண்டும் எளிமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு போட்டியிட்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகி வருகின்றனர். சிறிய மாநிலம் என்பதால், படித்து வெளிவரும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கொடுப்பது கடினம்.
இங்கு படித்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும்போது, மற்ற மாணவர்களிடம் போட்டி போடும் அளவிற்கு திறனை வளர்க்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் வரவேற்க தக்க நல்ல திட்டம் ஆகும். இது, இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் கண்கூடாக மக்களுக்கு தெரியவரும். தமிழ் மொழி பாதுகாக்கப்படும்" என்றார்.