ஊராட்சி ஒன்றிய அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகள்
ஊராட்சி ஒன்றிய அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகள்
UPDATED : நவ 02, 2014 12:00 AM
ADDED : நவ 02, 2014 10:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராஜிவ் அபியான் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஊராட்சி ஒன்றிய அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகள், மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நவ.,5 ல் துவங்குகிறது.
இப்போட்டிகள் காவனூர், நயினார்கோவில், திருவாடானை, சத்திரக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், சாயல்குடி, மண்டபம் முகாம், பார்த்திபனூர், திருப்புல்லாணி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 11 இடங்களில் நடக்கிறது.
பங்கேற்க வயது வரம்பு இல்லை. வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகள் பெண்களுக்கு மட்டும் நடைபெறும். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் தெரிவித்துள்ளார்.

