மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரிக்கு வந்த சிங்கப்பூர் மாணவர்கள்
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரிக்கு வந்த சிங்கப்பூர் மாணவர்கள்
UPDATED : நவ 16, 2014 12:00 AM
ADDED : நவ 16, 2014 12:07 PM
மதுரை: வெளிநாட்டு அனுபவ கல்வி பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் மாணவர்கள், மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரிக்கு வந்து சிறப்பான அனுபவம் பெற்றனர்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும், மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலமும் இணைந்து நடத்திய அயல்நாட்டு அனுபவகல்வி பயண தொடக்கவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சிங்கப்பூர் மாணவர்கள் சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரிக்கு வந்தனர். அங்குள்ள திரைப்படத்துறை, சியாமளாவாணி வானொலி பன்பலை துறைகளை பார்வையிட்டனர்.
அப்போது, பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்த மாணவர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றனர். மேலும், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தனது வாழ்க்கை அனுபவங்களையும், மாணவர்களுக்கான எதிர்கால வழிகாட்டுதல்களையும் வழங்கினார். பின்னர் சிங்கப்பூர் மாணவர்கள் மதுரையில் சமணர் குகை உட்பட பல முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

