உலகின் வலிமையான கரன்சி: இந்திய ரூபாய்க்கு எத்தனையாவது இடம்?
உலகின் வலிமையான கரன்சி: இந்திய ரூபாய்க்கு எத்தனையாவது இடம்?
UPDATED : ஜன 17, 2024 12:00 AM
ADDED : ஜன 17, 2024 05:24 PM
புதுடில்லி:
உலகின் வலிமையான கரன்சிகள் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில் குவைத் தினார் முதலிடத்தில் உள்ளது. இந்திய ரூபாய்க்கு 15வது இடம் கிடைத்துள்ளது.ஒரு நாடு சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கும், பொருளாதார நிலைமையை எடுத்துக் காட்டவும் அந்நாட்டின் கரன்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்நாட்டின் கரன்சியின் வலிமையை பொருத்தே, அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையும், துடிப்பான நிதி நிலைமையும் அமையும். கரன்சி மதிப்பு சரியும் போது, பொருளாதாரம், அன்னிய முதலீடு ஆகியவையும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது.தற்போதைய நிலையில் 180 நாடுகளின் கரன்சிக்கு ஐ.நா., அங்கீகாரம் அளித்துள்ளது. அதில், சில கரன்சிகள் உலகளவில் பிரபலம் ஆனவை. பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த காரணிகள் மட்டும் அதன் மதிப்பு மற்றும் வலிமையைத் தீர்மானிக்காது. இந்நிலையில், உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில் குவைத் தினார் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் பஹ்ரைன் தினாரும்3வது இடத்தில் ஓமனின் ரியாலும்4வது இடத்தில் ஜோர்டானின் தினாரும்5வது இடத்தில் ஜிப்ரால்டர் பவுண்டும்6வது இடத்தில் பிரிட்டிஷ் பவுண்டும்7 வது இடத்தில் கேமன் தீவுகளின் டாலரும்8 வது இடத்தில் சுவிட்சர்லாந்தின் பிராங்க்கும்9 வது இடத்தில் யூரோவும்10 வது இடத்தில், அமெரிக்க டாலரும் உள்ளது.இந்திய ரூபாய் 15வது இடத்தில் உள்ளது.