sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கடலுாரில் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா

/

கடலுாரில் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா

கடலுாரில் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா

கடலுாரில் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா


UPDATED : பிப் 02, 2024 12:00 AM

ADDED : பிப் 02, 2024 10:37 AM

Google News

UPDATED : பிப் 02, 2024 12:00 AM ADDED : பிப் 02, 2024 10:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தினமலர் நாளிதழ் நடத்தும் ஆசிரியர்களுக் கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா, கடலுாரில் நாளை 3ம் தேதி நடக்கிறது.தினமலர் நாளிதழ், ராஜ்விஜய் டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதுச்சேரி மற்றும் கடலுார் கிளைகள், கடலுார் சுமங்கலி சில்க்ஸ் இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு மற்றும் லட்சிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, நாளை 3ம் தேதி, கடலுார் செங்குந்தர் திருமண மண்டபத்தில், காலை 9:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.விழாவை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, &'தினமலர்&' லட்சிய ஆசிரியர் விருது-2023 வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதுச்சேரி விற்பனை பிரிவு மேலாளர் அரவிந்த், புதுச்சேரி -கடலுார் ராஜ் விஜய் டி.வி.எஸ்., மேலாண் இயக்குநர் சீனிவாசமூர்த்தி, சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஸ்தர் அலிசிறப்பு அழைப்பாளர்களாகபங்கேற்கின்றனர்.புதுச்சேரி கல்வியாளர் புகழேந்தி, சென்னை அட்வான்ஸ்டு சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மதுமிதா கோமதிநாயகம் ஆகியோர், பள்ளி ஆசிரி யர்கள் எதிர்நோக்கும் மன அழுத்த பிரச்னைகள் குறித்தும், அதனை சரி செய்வதற்கான தீர்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.சிறப்பு அமர்வை தொடர்ந்து கலந்துரையாடல் நடக்கிறது. இதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு கல்வியாளர் புகழேந்தி, மதுமிதா கோமதிநாயகம் விளக்கம் அளிக்கின்றனர்.கருத்தரங்கில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட ஆசிரியர்கள் 97902 25651 என்ற மொபைல் எண்ணிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் 95247 81197 என்ற மொபைல் எண்ணிலும் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும்.புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட ஆசிரியர்கள் 97902 25651 என்ற மொபைல் எண்ணிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் 95247 81197 என்ற மொபைல் எண்ணிலும் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும். 






      Dinamalar
      Follow us