வாகனம் ஓட்டிய மாணவர்கள்: கர்நாடகாவில் பெற்றோர் மீது வழக்கு
வாகனம் ஓட்டிய மாணவர்கள்: கர்நாடகாவில் பெற்றோர் மீது வழக்கு
UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 08:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
கர்நாடகாவில் லைசென்ஸ், உரிய ஆவணங்கள் இல்லாமல் , வாகனம் ஓட்டிய மைனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.இது குறித்து மாநில போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறார்கள் , மாணவர்கள் பலர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் பைக் ஓட்டுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. 23 பள்ளிகள் அருகே இந்த சோதனை நடந்தது. இதில் 600 வாகனங்கள் சோதிக்கப்பட்டதில் 177 பேர் விதிமீறல் வந்திருப்பதை கண்டறியப்பட்டது.சம்பந்தப்பட பெற்றோர்கள் 177 பேர் மீது வழக்கப்பதியப்பட்டு அபராதம் தலா ரூ. 5 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.