எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முன்னணியில் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முன்னணியில் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 12:43 PM
சென்னை:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் இருப்பதுடன், நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்கு வகிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2021ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. இது மத்திய அரசின் புள்ளிவிவரம் என்பது கூடுதல் தகவல்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம். தலை நிமிரும் தமிழகம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.