sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

Introduction of A.I., chatbot in Prime Minister's Namo app!

/

Introduction of A.I., chatbot in Prime Minister's Namo app!

Introduction of A.I., chatbot in Prime Minister's Namo app!

Introduction of A.I., chatbot in Prime Minister's Namo app!


UPDATED : ஏப் 14, 2024 12:00 AM

ADDED : ஏப் 14, 2024 06:33 PM

Google News

UPDATED : ஏப் 14, 2024 12:00 AM ADDED : ஏப் 14, 2024 06:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் துல்லியமாக உடனுக்குடன் பதில்களை அருவியாய் கொட்டும் வகையில் நமோ செயலியில், புதிதாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தங்களது அனைத்து செயல்பாடுகளையும் அதிநவீன தொழில்நுட்ப வசதி களுடன் பா.ஜ., மேலிடம் கையாளத் துவங்கி உள்ளது. இதன்படி, ஏற்கனவே நமோ ஆப் என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு என, தனிப்பட்ட முறையில் இயங்கி வரும் பிரத்யேகமான செயலியும், அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இணையதளம்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமோ செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தற்போதுள்ள அதிநவீனமான இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ள, சாட் பாட் வாயிலாக, அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்துவோர், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி கேட்கும் எத்தகைய கேள்விகளுக்கும், ஒரு சில வினாடிகளுக்குள் பொருத்தமான பதில்களை, ஏ.ஐ., தொழில்நுட்பம் அள்ளிக் கொண்டு வந்து தரும்.

கூகுள் போன்ற தேடல் பொறியில் கேள்வி கேட்டால், அதுகுறித்து இணையதளத்தில் உள்ள தகவல்களை அது காட்டும். மேலும் தகவல் தேவையெனில் அதுகுறித்து தொடர்ந்து தேடிக் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது.

மேலும், இணைய பக்கம் ஒவ்வொன்றும் பதிவிறக்கம் ஆவதில் தாமதம் ஆகும். சில இணைப்புகள் உடனடியாக கிடைக்காத சூழலும் ஏற்படும். இதனால் ஏராளமான இணைப்புகளுக்கு செல்ல வேண்டிய சிரமங்கள் உள்ளன.

ஆனால், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அப்படி இல்லை. நினைத்து முடிக்கும் நிமிடத்தில் தகவல்கள் அருவியாய் கொட்டும். கூகுள் தேடலைக் காட்டிலும் இதில் வேகமும் பன்மடங்கு அதிகம்.

இதைத்தான், நமோ செயலியில் அறிமுகப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு, பிரதமரின் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து கேட்டால், அடுத்த வினாடியே, அத்திட்டம் குறித்த ஒட்டுமொத்த விபரங்களையும் கொண்டு வந்து காட்டி விடும்.

மோடி ஏன் இவ்வளவு புகழ் பெற்றவராக விளங்குகிறார் என்று கேட்டால், ஏராளமான தகவல்களுடன் உடனடியாக பதில் கிடைக்கிறது. அதேபோல, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மோடி செய்துள்ள நன்மைகள் என்ன என்று கேட்டால், அதற்கும் சாட் வாயிலாக விரிவான பதில்கள் கிடைக்கின்றன.

நேரடியாக தொடர்பு

பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்துவதற்காகவே இந்த தொழில்நுட்பத்தை, நமோ செயலியில் அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

டெஸ்க் டாப் மற்றும் மொபைல் என இரண்டிலுமே, நரேந்திர மோடி இணையதளம் அல்லது நரேந்திர மோடி செயலி வாயிலாக, இந்த ஏ.ஐ., தொழில்நுட்ப வசதி கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில், தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, 'பிடிஎப்' வடிவத்திலும் பதில்கள் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.







      Dinamalar
      Follow us