சென்னை அண்ணா பல்கலை., புகழ் எத்தியோப்பியா வரை பரவியது
சென்னை அண்ணா பல்கலை., புகழ் எத்தியோப்பியா வரை பரவியது
UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 05:35 PM

சென்னை:
சென்னை அண்ணா பல்கலை.,யுடன் எத்தியோப்பியா கல்வி அமைச்சகம் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி எத்தியோப்பியா மாணவர்கள் சென்னையில் தங்கி தங்களின் ஆராய்ச்சி படிப்புகளை துவக்குவர்.
எத்தியோப்பிய புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது எத்தியோப்பிய அறிஞர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். எத்தியோப்பியாவின் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வளர்ச்சிக்காக அந்நாடு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு புதிய முயற்சியாக நாட்டின் சிறந்த மாநில பல்கலைக்கழகத்தின் நேஷனல் இன்ஸ்ட்டியூஷன் ரேங்கிங் பிரேம்வொர்க் ( NRIF) தரவரிசையில் முதல் இடம்பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை எத்தியோப்பியா தேர்வு செய்துள்ளது.
முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணராஜ் ராமசுவாமி , புதிய ஆராய்ச்சி மூலம் புதிய தரவுகள் உருவாக்குவதற்கான சர்வதேச தொழில்நுட்ப பரிமாற்றத்தை அடைய இது வழிவகுக்கும். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய, இன்டர்நேஷனல் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கரன் மற்றும் எத்தியோப்பியா கூட்டு பிஎச்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு எத்தியோப்பிய மாணவர்கள், அறிஞர்கள் நன்றி கூறினர்.