UPDATED : அக் 10, 2024 12:00 AM
ADDED : அக் 10, 2024 08:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :
நமக்கு நாமே திட்டத்தில் வாவிபாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி வழங்கப்பட்டது.
திருப்பூர், வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 26.56 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பங்களிப்பாக, 7.85 லட்சம் ரூபாய் நிதியை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், வாவிபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து வழங்கியுள்ளார்.இதற்கான வரைவோலையை, கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடம், முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் வழங்கினார்.