sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: புதிய பதிப்பு வெளியீடு

/

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: புதிய பதிப்பு வெளியீடு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: புதிய பதிப்பு வெளியீடு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: புதிய பதிப்பு வெளியீடு


UPDATED : டிச 09, 2024 12:00 AM

ADDED : டிச 09, 2024 09:16 AM

Google News

UPDATED : டிச 09, 2024 12:00 AM ADDED : டிச 09, 2024 09:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்கள் விரும்பி படிக்கும் தமிழ் புத்தகங்களில் ஒன்று, அக்னி சிறகுகள். முன்னாள் ஜனாதிபதி, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் வாழ்கை வரலாற்றை உள்ளடக்கமாக உடையது. இது, விங்ஸ் ஆப் பயர் என்ற தலைப்பில், அருண் திவாரியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில், மு.சிவலிங்கம் மொழி பெயர்ப்பில் முதல் பதிப்பு, 25 ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

ராக்கெட் தொழில்நுட்பம்


சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு வாசகர்களை கவரும் வகையில், தற்போது காலச்சுவடு பதிப்பகம் புதிய மொழி பெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.

மொழியாக்கம் செய்து உள்ள அரவிந்தன் கூறியதாவது:



அறிவியல், தொழில் நுட்பத்தில் சாதனை படைத்து, மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்தவர் அப்துல் கலாம். தமிழர் உள்ளங்களில் இமயமாக நிறைந்திருக்கிறார். அதற்கு இந்த நுால் ஒரு முக்கிய காரணம்.

ஏழை குடும்பத்தில் பிறந்த கலாம், திட்டமிட்ட செயல்பாட்டல் சாதனைகள் படைத்தவர். கனவுகளை கைவிடாமல் துரத்தி பிடித்து செயல்படுத்தியவர். அதற்கு துணை நின்றோரையும், கருத்துக்களையும் அற்புதமாக விவரிக்கிறது இந்த புத்தகம். உத்வேகம் ஊட்டும் வகையில் அமைந்து உள்ளது.

பஞ்சம், பசி காலத்தில், ராக்கெட் தொழில் நுட்பத்துக்கு பணம் செலவழிப்பது அவசியமா என கேட்டோருக்கு, அறிவார்ந்த செயல்பாட்டால் பதில் சொல்லியவர் கலாம்.

ராக்கெட் தொழில்நுட்பம் சுயசார்புடன் விளங்க உழைத்ததன் பின்னணியில் உள்ள நாட்டுப்பற்று, தொலைநோக்கு பார்வை அபாரமானது. அந்த உழைப்பை தெரிந்து கொள்ள, அக்னி சிறகுகள் நுாலை வாசிக்க வேண்டியது அவசியம்.

அறிவியல் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு, நாட்டின் பாதுகாப்பு, உலக அளவில் மதிப்பு உயர்வதற்கு எந்த அளவு அவசியம் என்பதை உணர்த்தும்.

அவரது மேலாண்மை திறன், ஒருங்கிணைக்கும் ஆற்றல், திட்டமிடல், காலநேரம் பார்க்காத உழைப்பு, பணிச்சூழலை எளிமையாக்கிய தீவிரம், உயரங்களை எட்டிய போது காட்டிய பணிவு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் என, தனித்தன்மைகள் இந்த புத்தகத்தில் வெளிப்பட்டு உள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த சொற்களை புரிந்து கொள்ள ஏற்ற வகையில், தமிழ்ச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இது, வாசிப்பில் சுவாரசியம் தந்து இளைய தலைமுறையினரை கவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எளிய நடை

காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் கூறியதாவது:



உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது, அக்னி சிறகுகள் புத்தகம். சுலபமாக புரிந்து கொள்ள எளிய நடையில் உருவாக்கப்பட்டு உள்ளது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை, 232 பக்கங்களை தரமாக வடிவமைத்து உள்ளோம்.

இதன் விலை, 250 ரூபாய். பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவியருக்கு பரிசளிக்க உகந்தது. நுாலைப்பெற, 96777 78862, 96777 78865 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us