அண்ணனாக பாருங்கள்; அண்ணா பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை உருக்கம்
அண்ணனாக பாருங்கள்; அண்ணா பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை உருக்கம்
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 09:06 AM
சென்னை:
ஆழ் மனதில் இருந்து வந்ததை தான் செய்துள்ளேன்; பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணாக நினைத்து கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக இதை பார்காதீர்கள், என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
சாட்டையை எடுத்து நானே என்னை அடித்துக் கொண்டது, சாதனையெல்லாம் இல்லை; ஆழ் மனதில் இருந்து வந்ததை தான் செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணாக என்னை நினைத்து கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக இதை பார்காதீர்கள். அண்ணா பல்கலை மாணவி புகாரில், எப்.ஐ.ஆர்., எழுதப்பட்டிருப்பது, மனதில் இருந்து வந்திருக்கக்கூடிய கருத்தாக இல்லை என்பதை. நான் தீர்க்கமாக சொல்லியுள்ளேன். அதை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டதற்காக, 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவை நியமித்தது விசாரிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, நல்ல செயலாக பார்க்கிறேன்.
நாளை, தேசிய மகளிர் ஆணைய குழு வருகிறது. உண்மையான குற்றவாளி தப்பிக்க முடியாது. சென்னை போலீஸ் கமிஷனர் கருத்துக்கும் உயர் நீதிமன்றம் கண்டனங்களை பதிவு செய்து உள்ளது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை உடனடியாக எடுத்து, முக்கிய விஷயங்களை சொல்லியுள்ளது. நேர்மையாக இருக்கக்கூடிய காவல் துறை நடுநிலையாக இல்லை.
கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய ஒருவர், காரில் சுற்றிக் கொண்டிருக்கிறார். காரணம், சிஸ்டம் கெட்டு போய் விட்டது. இதை கண்டித்து, பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தினாலும், கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். இதில், கருந்து சுதந்திரம் எங்கு உள்ளது? அதனால் தான் இந்த முடிவை தவமாக எடுத்துள்ளேன்.
வி.சி., தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் தான் இருக்கிறாரா, இல்லை ஒரு தனித்தீவு கட்டி வாழ்கிறாரா என்பது தெரியவில்லை. சமீபத்தில் அவர் பேசும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தை, அவர் தான் முதலில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.
தி.மு.க., அமைச்சர்கள், தங்கள் கட்சிக்கு ஆதரவு தருவதை விட, திருமாவளவனுக்கு தரும் ஆதரவு அதிகமாக உள்ளது. டில்லியில் உள்துறை அமைச்சரிடம், அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக இது குறித்து பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.