UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 10:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சென்னையிலுள்ள தொழில்நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் தொழில்நுட்ப கல்லுாரி ஒன்றில் ஆர்த்தீஸ்வரி என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கல்லுாரி கருணைத்தொகை வழங்க மறுத்ததால், கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னையிலுள்ள தெற்கு பிராந்திய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சார்பில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. கல்வி குழு சார்பில் நேரில் ஆஜராக தவறியதால், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் உத்தரவிட்டார்.
அத்தொகையை ஒரு மாதத்திற்குள் ஐகோர்ட் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது.