UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 09:04 AM
பொள்ளாச்சி :
பொள்ளாச்சியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது.
தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பானுமதி, தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார். கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசுப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத மாணவர்கள் - 297, மாணவியர் - 496 பேர், என மொத்தம், 793 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள் - 263, மாணவியர் - 455 பேர், என மொத்தம், 718 பேர் தேர்வெழுதினர்.
மாணவர்கள், 34, மாணவியர், 41 என, மொத்தம், 75 பேர் தேர்வு எழுதவில்லை, என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.