UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:04 AM
கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இ-யுவா மையம் சார்பில், காஸ்பிட்டுடன் இணைந்து, பிசினஸ் மாடல் கேன்வாஸ் ஒரு நாள் தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறை நடந்தது.
பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்பது, தொழில்முனைவோராக விரும்புவோர் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறையாகும். தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவர் தினேஷ்குமார் சுந்தரவேலு பிசினஸ் மாடல் கேன்வாஸ் குறித்து விரிவாக விளக்கினார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்களின் வணிக உத்திகளாக, நூதன விதை வீரியம் ஏற்றும் முலாம் பூச்சு பயோகோல்ட், உலர் பூச்செண்டு 'எவர்ப்லூம்' மற்றும் பாரம்பரிய அரிசி மாவு சார்ந்த மிட்டாய் ஹெல்த்தி பைட்ஸ் போன்ற சுவாரஸ்யமான தயாரிப்புகளை முன் மொழிந்தனர்.
தாவர உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலா தேவி, பேராசிரியர் மோகன்குமார், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறை தலைவர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.