UPDATED : ஏப் 30, 2025 12:00 AM
ADDED : ஏப் 30, 2025 10:08 AM
கோவை:
கோவை மாவட்ட, இளம் மழலையர் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்க கூட்டம், நடைபெற்றது.
சங்கத் தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இளம் மழலையர் பள்ளிகளுக்கு எமிஸ் எண் வழங்கும் நடைமுறையில், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபாடு காணப்படுவதால், அனைத்து பள்ளிகளுக்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து எமிஸ் எண் வழங்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் வயது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 6 வயதும், தமிழக அரசு பள்ளிகளில் 5 வயதும் கோரப்படுவது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, பாடச்சுமை, உளவியல் வளர்ச்சி மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும் 6 வயதே குறைந்தபட்சமாக, நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் மழலையர் பள்ளி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

