அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க: ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்
அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க: ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்
UPDATED : நவ 19, 2025 05:51 PM
ADDED : நவ 19, 2025 05:53 PM
'அரட்டை' சமூக வலைதள செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
மெசேஜிங் செயலிகளில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தான். இந்தியாவிலும் பரவலாக இந்த செயலிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்கையில், சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, அரட்டை என்ற மெசேஜிங் செயலி ஒன்றை உருவாக்கி அதனை விஞ்சியது.
சுதேசி செயலியான அரட்டைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. இதனால் பயனர்களுக்கு ஏராளமான அப்டேட்களை அரட்டை செயலில், ஸ்ரீதர் வேம்பு கொண்டு வருகிறார்.
தற்போது அரட்டை செயலியில், End to End என்கிரிப்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்டேட் செய்யுமாறு ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில், அரட்டை செயலியை அப்டேட் செய்யுங்கள். இன்று செவ்வாய் இரவு முதல் End to End என்கிரிப்ஷன் வசதி செயல்பாட்டு வரும்.
இந்த அப்டேட் இன்னும் குரூப்பிற்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனை நாங்கள் சில வாரங்களில் அப்டேட் செய்வோம். இன்னும் பல அருமையான அம்சங்கள் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நன்றி.இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் அம்சம் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் உள்ள நிலையில் தற்போது அரட்டை செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தினமலர்
சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் அரட்டை சேனல் லிங்க்:
https://web.arattai.in/@dinamalar

