sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது

/

பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது

பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது

பயன் தராத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 13 ஆண்டு கால அவலம் தொடர்கிறது


UPDATED : ஜன 21, 2025 12:00 AM

ADDED : ஜன 21, 2025 09:07 AM

Google News

UPDATED : ஜன 21, 2025 12:00 AM ADDED : ஜன 21, 2025 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தொடர்ந்து டாக்டர் பற்றாக்குறை, செவிலியர் பயிற்சி பள்ளி, மறவமங்கலம் தனி போலீஸ் ஸ்டேஷன், இரவு நேர பஸ் வசதி, நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதி என சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

பயன் இல்லாத மருத்துவமனை


சிவகங்கையில் 2012ல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவங்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 230 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 160 பேர் தான் பணி புரிகின்றனர். இதில் ஸ்பெசலிஸ்ட் டாக்டர்களான இதவியல், நரம்பியல், சிறுநீரகவியல் துறை டாக்டர்கள் பணியிடம் எப்போதும் காலியாகவே உள்ளது. அதேபோல் அடிக்கடி பழுதாகும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வார கணக்கில் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது.

ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கு கூட இதவியல் துறை டாக்டர் இல்லாததால் எக்கோ பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் சூழல் உள்ளதால் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருந்தும் பயனில்லாத சூழல் உள்ளது. மருத்துவக் கல்லுாரியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி, ஆய்வக நுட்பனர் பயிற்சி, நுண்கதிர் தொழில் நுட்ப பணியாளர் வகுப்பு, செவிலியர் பயிற்சி கல்லுாரி, மருந்தாளுநர் பட்டயப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us