தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர்-ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியால் விளைந்த நன்மை

தினமலர்-ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியால் விளைந்த நன்மை

தினமலர்-ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியால் விளைந்த நன்மை


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 10, 2011 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 10, 2011 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: தினமலர் சார்பில் நடத்திய, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியின் மூலம் சென்னை பள்ளி மாணவர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும் அவர்களை 86.41 சதவீத தேர்ச்சியை பெற வைத்துள்ளது என சென்னை மேயர் சுப்ரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை பள்ளிகள் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2005, 2006ம் ஆண்டு 70 சதவீதமாக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 86.41 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கத்தக்க ஒன்று. மாநகராட்சி நிர்வாகம் அம்மாணவர்களுக்கு தொடர்ந்து பல வகைகளில் குறிப்பாக ஊக்கத்தொகை, பரிசுத்தொகை அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற பல்வேறு விஷயங்களில் அக்கறை செலுத்தி வந்தது.


எனினும் "தினமலர்" நிறுவனம் கடந்த நவம்பர் 25ம் தேதி "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியின் மூலம் சென்னை பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும் அவர்களை இந்தாண்டு 86.41 சதவீத தேர்ச்சி என்கிற இலக்கினை அடைய அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு தேர்வு எழுதிய 5,800 ஏழை குடும்பங்களின் சார்பில் தங்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சுப்ரமணியன் கூறியுள்ளார்.


"தினமலர்" நாளிதழ், "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சிகளை சென்னை, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், தாம்பரம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய இடங்களிலும், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கென தனியாக பிளஸ் 2 படிப்புக்கு ஒரு நாளும், 10ம் வகுப்புக்கு ஒரு நாளும் நடத்தியது. இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்கள், "டியூஷன்" சென்று ஆசிரியர்களின் சிறப்பு வழிகாட்டுதல்களை பெற முடியாத மாணவ, மாணவியர் பலனடைந்து வருகின்றனர்.


"தினமலர்" செய்து வரும் மக்கள் சேவைக்கு கிடைத்து வரும் பரிசாகவே மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அமைந்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் உள்ள பெரிய நகரங்கள் அனைத்திலும் "தினமலர்" சார்பாக "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us