தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால் நூற்றாண்டுகளாக முன்னிலை வகிக்கும் விருதுநகர் மாவட்டம்

கால் நூற்றாண்டுகளாக முன்னிலை வகிக்கும் விருதுநகர் மாவட்டம்

கால் நூற்றாண்டுகளாக முன்னிலை வகிக்கும் விருதுநகர் மாவட்டம்


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 10, 2011 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 10, 2011 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகர்: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.


இந்த மாவட்டத்தில் தேர்வெழுதிய 19 ஆயிரத்து 32 மாணவர்களில், 18 ஆயிரத்து 94 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.07 சதவீத தேர்ச்சி. கடந்த ஆண்டு 95.93 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருந்தாலும், மாநிலத்தின் முதலிடத்தை 26 வது ஆண்டாக தக்க வைத்துள்ளது இம்மாவட்டம். இங்கு, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நிரப்பப்படாத காலியிடங்களில் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இதற்கு ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைக்கின்றனர். ஒவ்வொரு தேர்வின்போதும், மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு, குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல பள்ளிகளில் தினமும் மாலை டிபனுடன், மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கப்படுகிறது. மாதம்தோறும் தலைமையாசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேர்ச்சி வீதம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதுபோன்ற திட்டமிடுதலாலும், தன்னலம் கருதாத ஆசிரியர்களாலும் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் கூறுகையில், "மாணவர்களின் விடா முயற்சியும், ஆசிரியர்களின் ஆர்வமான உழைப்பும், அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும் தான் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து சாதனை படைக்க காரணமாக உள்ளது. கடுமையான கண்காணிப்பும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டுவதால், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. புதியதாக துவக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் கூட 96.02 சதவீதம் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us